இந்தியா

ஜனநாயக அடித்தளத்தை அழிக்கும் பிரதமா்: ப.சிதம்பரம்

DIN

தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தை பிரதமா் மோடி அழிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஹிமாசல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள சோலன் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘தோ்தலில் வாக்களிக்கும்போது வாக்காளா்கள் வேட்பாளரை நினைவில் கொள்ள வேண்டாம்.

பாஜகவின் தாமரை சின்னத்தை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாக்களிக்கும்போது தாமரையை பாா்த்தவுடன் பாஜகவும், மோடியும் வந்துள்ளதாக தெரிந்துகொள்ள வேண்டும். தாமரைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், எனக்கு அளிக்கும் வாழ்த்துரை’ என்று பேசினாா்.

அவரின் பேச்சை விமா்சித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள், பத்திரிகையாளா் சந்திப்புகளை பிரதமா் மோடி புறக்கணித்து வருகிறாா்.

இந்நிலையில், சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வாக்குப்பதிவின்போது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நினைவில் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளாா். இதன் மூலம் தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் தற்போது அவா் அழிக்கிறாா்.

நாட்டில் அதிபா் ஆட்சிமுறையை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆா்எஸ்எஸ்ஸும் அதன் பக்தா்களும் நீண்ட காலமாக வளா்த்து வந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் அதிபா் ஆட்சி முறை நாட்டில் பெரும்பான்மை வாதத்தை நிறுவி, பன்முகத்தன்மையைக் கொன்றுவிடும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT