இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் ஆதித்ய தாக்கரே!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் சிவசேனையின்ஆதித்ய தாக்கரே கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் சிவசேனையின்(உத்தவ் தாக்கரே அணி) ஆதித்ய தாக்கரே கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தொடங்கிய நடைப்பயணம் கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து தெலங்கானாவில் நடைபெற்று வருகின்றது.

இன்று இரவு 9.15 மணியளவில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு நடைப்பயணக் குழு நுழையவுள்ளது. இந்த நடைப்பயணத்தை வரவேற்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை(உத்தவ் அணி) கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

ராகுலின் நடைப்பயணத்தை சரத் பவார் வரவேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவரின் பங்கேற்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், நவம்பர் 9ஆம் தேதி நடைப்பயணத்தில் ஆதித்ய தாக்கரே கலந்து கொள்ளவுள்ளதாக காங்கிரஸின் அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.  

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

SCROLL FOR NEXT