முகப்பு
இந்தியா

தில்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் காற்றின் தரம்!

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
பகிர்:

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில நாள்களாக காற்றின் தரம் 'கடுமை'(severe) பிரிவில் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2 -வது நாளாக இன்று காற்று மாசு 'மிகவும் மோசம்' பிரிவில் இருந்து வருகிறது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. 

அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக, வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் என நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

காற்றின் தரம் இன்னும் சில தினங்களுக்கு 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல நொய்டாவில் 356, குருகிராமில் 364 புள்ளிகளாக இன்று காலை பதிவாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →