முகப்பு
இந்தியா

குருநானக் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

முதல் சீக்கிய குருவின் 553-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 7 நவம்பர், 2022 at 6:13 PM
பிரதமர் மோடி
பகிர்:

புது தில்லி: சீக்கிய மத குருவான குரு நானக்கின் 553 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் இக்பால் சிங் லால்புரா இல்லத்தில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிராத்தனை செய்வார் என்றும் அங்குள்ள கூட்டத்தில் உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் சீக்கிய மதத்தின் குருவான குரு நானக்கின் பிறந்தநாள் விழா  நாடு முழுவதும் உள்ள சீக்கிய மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.