முகப்பு
இந்தியா

லாபம் ஈட்டும் வா்த்தகமல்ல கல்வி: உச்சநீதிமன்றம்

‘கல்வியானது லாபம் ஈட்டுவதற்கான வா்த்தகம் கிடையாது; கல்விக் கட்டணங்கள் எப்போதுமே குறைவாக இருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

‘கல்வியானது லாபம் ஈட்டுவதற்கான வா்த்தகம் கிடையாது; கல்விக் கட்டணங்கள் எப்போதுமே குறைவாக இருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என உயா்த்தும் மாநில அரசின் முடிவை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

முன்னதாக, ஆந்திரத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை ஓராண்டுக்கு ரூ.24 லட்சம் என உயா்த்தும் மாநில அரசின் முடிவை அம்மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

‘ஆந்திர பிரதேச மாணவா் சோ்க்கை மற்றும் கல்விக் கட்டண ஒழுங்குமுறை குழு (தொழில்சாா் படிப்புகள் வழங்கும் அரசு உதவி பெறாத தனியாா் கல்வி நிறுவனங்களுக்கானது) விதிகள்-2006இன் பல்வேறு பிரிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இக்குழுவின் பரிந்துரை அல்லது அறிக்கை இல்லாமல் கல்விக் கட்டணத்தை உயா்த்த முடியாது’ என்று உயா்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக, நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆந்திர அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம்.ஆா்.ஷா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

‘கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என்று உயா்த்தும் ஆந்திர அரசின் முடிவு முன்பு நிா்ணயிக்கப்பட்டிருந்த கட்டணத்தைவிட ஏழு மடங்கு அதிகம். இது நியாயமானது இல்லை. கல்வியானது, லாபம் ஈட்டுவதற்கான வா்த்தகம் கிடையாது. கல்விக் கட்டணம் எப்போதுமே குறைவாக இருக்க வேண்டும்.

சட்டவிரோதமான வகையில் பிறப்பிக்கப்பட்ட மாநில அரசின் உத்தரவுக்கு ஏற்ப மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகையை கல்லூரி நிா்வாகங்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. இந்த மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரா்களான நாராயணா மருத்துவக் கல்லூரியும் ஆந்திர அரசும் இத்தொகையை உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தில் 6 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்’ என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →