இந்தியா

சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது: 9 ரயில்கள் ரத்து!

DIN

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், 9 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் தடம் புரண்டதால், இந்த வழிதடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT