இந்தியா

50-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சந்திரசூட்!

DIN

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் இவரது தந்தை ஆவார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பணிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா்கள் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 1959-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி பிறந்த டி.ஒய்.சந்திரசூட், 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை பதவி வகிப்பாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT