அசர வைக்கும் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எண்ணிக்கை
நாட்டில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | கலகத் தலைவன் திரைப்படத்தின் ‘ஹே புயலே’ பாடல் வெளியீடு
இந்நிலையில் நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை வெளியிட்டார்.
அதில் வெளியாகியுள்ள தரவுகளின்படி நாட்டில் 100 வயதைக் கடந்த 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 1.08 கோடி வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 7 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது? காங்கிரஸ் தலைவர் கேள்வி
கடந்த சில தினங்களுக்கு முன்பாக 100 வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தியாவின் முதல் வாக்காளரான ஷ்யாம் சரண் நெகி மறைவிற்கு தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்திருந்தது.