கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுடன் முதல்வர் பினராயி விஜயன் 
இந்தியா

பல்கலை. வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை நீக்குவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

DIN

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை நீக்குவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

கேரள அரசுக்கும், ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கேரளத்தில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்வரி நியமனம் சட்டவிரோதமானது என்று கூறி துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. துணைவேந்தர் பதவிக்கு குறைந்தது 3 பேரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்ற நிலையில் மாநில அரசு ஒருவரின் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், ஒருவரது பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட, மாநிலத்தின் இதர 11 பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு, விளக்கம் கேட்டு ஆளுநா் நோட்டீஸ் பிறப்பித்தாா். மேலும் அவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆளுநரின் உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை அப்பதவியில் இருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் தலைமையில் இன்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனினும், இந்த அவசரச் சட்டத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அமலுக்கு வரும்

தமிழகத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT