இந்தியா

தில்லி பாஜக முக்கியக் குழு நட்டாவுடன் சந்திப்பு! 

இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலுக்குத் தயாராகும் வகையில், தில்லி பாஜக முக்கியக் குழு கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்தது. 

DIN

இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலுக்குத் தயாராகும் வகையில், தில்லி பாஜக முக்கியக் குழு கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்தது. 

மாநிலத் தலைவர் ஆதோஷ் குப்தா, மாநிலப் பொறுப்பாளர் பைஜயந்த் ஜெய் பாண்டா, இணைப் பொறுப்பாளர் அல்கா குஜார், தேர்தல் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் சூத் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் முக்கியக் குழு உறுப்பினர்களாக இருந்தனர். 

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வேட்பாளர் பட்டியல், தில்லியின் தற்போதைய காற்று மாசு நிலை, நிலப்பரப்பு பிரச்னை, பிரசார முறைகள்க குறித்து விவாதம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

நவம்பர் 12, 13 ஆகிய தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அடுத்த வாரம் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அடுத்த வாரம் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

தில்லி மநாகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7-ம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT