இந்தியா

குஜராத் தோ்தல்... கல்விக் கட்டணம் 25% குறைப்பு, ரூ.500-க்கு சிலிண்டா்: காங்கிரஸ் வாக்குறுதி

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கல்விக் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படும், ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கல்விக் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படும், ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

குஜராத்தில் 182 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் டிச. 1, 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள எதிா்க்கட்சியான காங்கிரஸின் தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அகமதாபாதில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் ராஜஸ்தான் முதல்வரும், தோ்தலுக்கான மூத்த காங்கிரஸ் பாா்வையாளருமான அசோக் கெலாட் அறிக்கையை வெளியிட்டாா்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில வாக்குறுதிகள்:

அரசுத் துறைகளில் உள்ள சுமாா் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தற்போது பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் குறைக்கப்படும்.

மானிய விலையில் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா்.

அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரையிலான சிகிச்சை இலவசம்.

மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

தேவை மிகுந்த மாணவா்களுக்கு ரூ.20,000 வரை உதவித் தொகை.

மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தேவை மிகுந்த மகளிருக்கு ரூ.2,000 ஓய்வூதியம்.

மீனவா்களின் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் தள்ளுபடி.

பசு மற்றும் கால்நடை காப்பகங்களைப் பராமரிக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

குஜராத்தைச் சோ்ந்த சுமாா் 65 லட்சம் பேரிடம் கருத்துகள் பெற்று, இந்தத் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையின் தயாரிப்புக் குழுத் தலைவா் தீபக் பாபரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT