இந்தியா

ஜி20 மாநாடு: இந்தோனேசியா செல்லும் பிரதமர்

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என வெளியுறவுத் துறை செயலர் வினய் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என வெளியுறவுத் துறை செயலர் வினய் தெரிவித்துள்ளார்.

பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ( நவம்பர் 14) இந்தோனேசியா செல்ல உள்ளார். இந்த மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  

இது குறித்து வெளியுறவுத் துறை செயலர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகின் பல்வேறு தலைவர்களும் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரம், ஆற்றல், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார் என்றார்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்ததையடுத்து பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.

இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தோனேசியா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழுத்தை அறுத்து எஸ்.ஐ. தற்கொலை முயற்சி!

மூதாட்டியிடம் நகை பறிப்பு!

தங்க நாணயம் கொள்ளையடித்த வழக்கு: ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது!

இந்திய தனியாா் விண்வெளித் துறையில் இளைஞா் புரட்சி! தனியாா் விண்வெளி வளாகத் திறப்பு விழாவில் பிரதமா் மோடி!

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு நிவாரணம்

SCROLL FOR NEXT