கோப்புப் படம் 
இந்தியா

திப்பு சுல்தான் சிலையை ஏன் அமைக்கக் கூடாது?: சித்தராமையா 

கர்நாடகாவில் திப்பு சுல்தான் சிலையை ஏன் அமைக்கக் கூடாதென முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

கர்நாடகாவில் திப்பு சுல்தான் சிலையை ஏன் திறக்கக் கூடாதென முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் செய்த் சனிக்கிழமை அன்று 100 அடி  திப்பு சுல்தான் சிலையை  மைசூரு அல்லது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைப்பதாக தெரிவித்து  இருந்தார். 

மேலும், “இஸ்லாத்தில் சிலைகளை நிறுவுவதற்கு இடமில்லை. அனுமதித்து  இருந்தால் எல்லா இடங்களிலும் சிலைகள் இருந்திருக்கும். இருந்த போதிலும் தடை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பட்டு மற்றும் மர பொம்மை தொழில், நில சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றுடன், ஜனநாயக ஆட்சிக்கு முன்மாதிரியாக இருந்த திப்புவின் ஆட்சியை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாக” தன்வீர் செய்த் தெரிவித்திருந்தார். 

இதற்கு பல திப்பு சிலை திட்டத்திற்கு பாஜக மற்றும் பல வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஸ்ரீராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக், பாபர் மசூதி போல் இடிக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

இதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: 

திப்பு சிலையை ஏன் கட்ட முடியாது?அவர்கள் கட்டட்டும். அவர் அதற்கு தகுதியானவர் இல்லையா?வரலாற்றை திரிக்கிறது பாஜக. கடந்த காலத்தில் நாராயண குரு, அம்பேத்கர் போன்றவர்கள் பற்றி என்ன சொன்னார்கள்? முற்றிலும் பொய்யான விஷயங்களைத் தவிர வேறில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT