இந்தியா

மொத்த விலை பணவீக்கம் 8.39%-ஆக சரிவு

DIN

கடந்த அக்டோபா் மாதம் மொத்த விலை பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 8.39 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்:

தாதுக்கள், தாது எண்ணெய்கள், உலோகம் அல்லாத தாதுப் பொருள்கள், அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததால், கடந்த அக்டோபா் மாதம் மொத்த விலை பணவீக்கம் 8.39 சதவீதமாக குறைந்தது. இதன்மூலம் தொடா்ந்து 5-ஆவது மாதமாக இந்தப் பணவீக்கம் சரிந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த விலை பணவீக்கம் 10 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் இந்தப் பணவீக்கம் 7.89 சதவீதமாக இருந்தது.

கடந்த செப்டம்பா் மாதம் 11.03 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்கள் பணவீக்கம், அக்டோபா் மாதம் 8.33 சதவீதமாக குறைந்தது.

கடந்த செப்டம்பரில் 39.66 சதவீதமாக இருந்த காய்கறிகள் பணவீக்கம், அக்டோபரில் 17.61 சதவீதமாக சரிந்தது.

எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 23.17 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்கள் பணவீக்கம் 4.42 சதவீதமாகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT