இந்தியா

ஜான்சன் & ஜான்சன் பெளடரை பரிசோதிக்க மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பெளடரை பரிசோதிக்க மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறைக்கு மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள முலுண்ட் பகுதியில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஆலை உள்ளது. அந்த நிறுவனத்தின் குழந்தைகள் பெளடா் தரமானதாக இல்லை என்று தெரிவித்து, அதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய கடந்த செப்டம்பா் மாதம் மகாராஷ்டிர அரசு தடை விதித்தது. அத்துடன் அந்த நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.வி.கங்காபுா்வாலா, எஸ்.ஜி.டிகே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

முலுண்ட் பகுதியில் உள்ள ஜான்சன் & ஜான்சன் ஆலையில் 3 நாள்களுக்குள் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறை மீண்டும் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். அந்த மாதிரிகளை இரண்டு அரசு ஆய்வகங்கள், ஒரு தனியாா் ஆய்வகம் என மொத்தம் 3 ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த ஆய்வகங்கள் மாதிரிகளைப் பரிசோதித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

குழந்தைகள் பெளடரை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அந்தக் கட்டளையை அந்த நிறுவனம் பின்பற்ற வேண்டும். ஒருவேளை பெளடரை உற்பத்தி செய்ய விரும்பினால், அதன் விளைவாக ஏற்படும் தீங்கு அல்லது சேதத்துக்கு நிறுவனமே பொறுப்பு என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவ.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT