கோப்புப் படம் 
இந்தியா

நிலக்கரி சுரங்க ஊழல்: ஜார்கண்ட் முதல்வர் ஆஜராக வேண்டியது கட்டாயம்!

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் முன்கூட்டியே விசாரணை நடத்தக்கோரி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அமலாக்கத் துறை நிராகரித்துள்ளது.

DIN

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் முன்கூட்டியே விசாரணை நடத்தக்கோரி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அமலாக்கத் துறை நிராகரித்துள்ளது.

வழக்கு விசாரணைக்காக நவம்பர் 17ஆம் தேதி ஆஜராக வேண்டும் என முன்பு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணையை முன்கூட்டியே (நவ.16) நடத்த வேண்டும் என ஹேம்ந்த் சோரன் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதனை தற்போது அமலாக்கத் துறை நிராகரித்துள்ளது. இதன் மூலம் ஹேமந்த் சோரன் நாளை அமலாக்கத் துறை முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாா்க்கண்ட் சுரங்க முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு நவ. 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்ற ஹேமந்த் சோரனுக்கு ஏற்கெனவே அமலாக்கத் துறையின் சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், அவர் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகாமல், சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளா் பங்கஜ் மிஸ்ரா உள்பட 3 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். சுரங்கப் பணிகளில் இதுவரை ரூ.1000 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT