இந்தியா

ராஜஸ்தானில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்: கெலாட்

ராஜஸ்தான் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

DIN

ராஜஸ்தான் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

இதுகுறித்து கெலாட்டின் சுட்டுரை பதிவில், 

கடந்த ஏழு நாள்களாக ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். 

ஜெய்பூரில்3,000 இளைஞர்களுக்கு வேலைக்கான கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும், 10 ஆயிரம் பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

ஜோத்பூரில் சுமார் 3,500 இளைஞர்களுக்கு வேலைக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. மேலும் 9,200 பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். 

மேலும், தொழில்நுட்பம் மற்றும் பிற திறன்களில் கவனம் செலுத்துமாறு மாநில இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ், டெக்னிகல் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள், அதனால் நீங்கள் நேர்காணலுக்கு வரும்போது, முழு நம்பிக்கையுடன் பதிலளிக்க முடியும். மேலும் (வேலைக்கு) நீங்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT