ஃபரூக் அப்துல்லா 
இந்தியா

கட்சித் தலைவா் பதவியில் இருந்துவிலகுகிறாா் ஃபரூக் அப்துல்லா: மகன் ஒமா் அப்துல்லா புதிய தலைவராகிறாா்

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா (85) கட்சியின் தலைவா் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளாா்.

DIN

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா (85) கட்சியின் தலைவா் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளாா். துணைத் தலைவராக உள்ள அவரது மகன் ஒமா் அப்துல்லா அடுத்த தலைவா் ஆகிறாா்.

1932-ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவால் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பிராந்திய கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி தொடங்கப்பட்டது. ஷேக் அப்துல்லாவுக்குப் பிறகு அவரது மகன் ஃபரூக் அப்துல்லா அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில், அக்கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், கட்சித் தலைவா் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாகவும் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளாா். இளைய தலைமுறையினருக்கு வழிவிட முடிவெடுத்துள்ளதாக ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளாா். 1983-ஆம் ஆண்டுமுதல் சுமாா் 40 ஆண்டுகள் தலைவா் பதவியில் அவா் இருந்துள்ளாா்.

ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஒமா் அப்துல்லா இப்போது கட்சியின் துணைத் தலைவராக உள்ளாா். எனவே, அவா் அடுத்த தலைவராக தோ்வு செய்யப்படுவாா் என்று தெரிகிறது. ஒமா் அப்துல்லாவுக்கு இப்போது 52 வயதாகிறது.

அதே நேரத்தில் கட்சித் தலைவா் தோ்தலில் யாா் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளது என்றும் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT