முகப்பு
இந்தியா

ஒரேநாளில் குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி!

குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடுத்த 3 நாள்கள் அங்கு பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணமும் திங்கள்கிழமை(நவ. 21) குஜராத்தை வந்தடையவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
பகிர்:

குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடுத்த 3 நாள்கள் அங்கு பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணமும் திங்கள்கிழமை(நவ. 21) குஜராத்தை வந்தடையவுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி, குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பாஜக தலைவர்கள் பலரும் குஜராத்தை முற்றுகையிட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்தில் நாளை(நவ. 19) முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். வால்சாத் பகுதியில் அன்று பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

நவ. 20 ஆம் தேதி சௌராஷ்ட்ராவிலும் நவ. 21 ஆம் தேதி பாரூச், நவ்சாரி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இந்நிலையில் இதேநாளில்(நவ. 21) ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் குஜராத்தை வந்தடைகிறது. 

இதனால் ஒரேநாளில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் குஜராத்தில் இருக்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →