வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு: சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம் 
இந்தியா

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு: சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு மேலும் நான்கு வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு

PTI

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்க சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு மேலும் நான்கு வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.அர். கவாய், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அடுத்த 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ஆர்பிஐக்கு அக்டோபர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கிங்ஃபிஷா், மகாராஷ்டிர வங்கி, யெஸ் வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களின் வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்படவில்லை.

இந்திய ரிசா்வ் வங்கிச் சட்டம், வங்கி ஒழுங்காற்றுச் சட்டம், பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் உள்ளிட்டவற்றை மீறும் வகையில், அவா்கள் செயல்பட்டுள்ளனா். எனவே வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

SCROLL FOR NEXT