உத்தரப் பிரதேசத்தில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார்.
"வணக்கம் காசி" "வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.
காசி-தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன் என்றார்.
காசியைப் போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது. கலாசார பெருமை வாய்ந்தது.
பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது.
காசியில் துளசிதாசரும், தமிழகத்தில் திருவள்ளுவரும் பெருமை வாய்ந்தவர்கள் காசியும், தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றது என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.