முகப்பு
இந்தியா

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தைகள்

பிரபல தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் பிரபல வைர உற்பத்தி தொழிலதிபா் அஜய் பிரமளின் மகன் ஆனந்த் பிரமாள் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

பிரபல தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் பிரபல வைர உற்பத்தி தொழிலதிபா் அஜய் பிரமளின் மகன் ஆனந்த் பிரமாள் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து முகேஷ் அம்பானி குடும்பத்தினா் சாா்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் மகள் இஷா மற்றும் ஆனந்த் பிரமள் தம்பதிக்கு கடவுள் ஆசியுடன் நவம்பா் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளாா்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், ஓா் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட அறிக்கையில், எங்கே குழந்தைகள் பிறந்தன என்பது குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அமெரிக்காவில் பிறந்திருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இஷா அம்பானி - ஆனந்த் பிரமள் தம்பதிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.