கோப்புப் படம். 
இந்தியா

தில்லியில் சினை நாயை அடித்துக்கொன்ற மர்மநபர்கள்

தில்லியில் சினை நாயை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தில்லியில் சினை நாயை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியைச் செர்ந்தவர்கள் என்எப்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் ஒரு வெள்ளை தெரு நாயை குச்சிகளால் அடித்து, பின்னர் அதை திறந்தவெளியில் மர்ம நபர்கள் வீசினர். 

நாய் சினையாக இருந்ததாகவும், தாக்குதலால் இறந்ததாகவும் அவர்கள் தங்கள் புகாரில் கூறியுள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் இதுதொடர்பான வீடியோக்களையும் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் சமர்ப்பித்துள்ளனர். 

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தின் விடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிகழ்வு தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT