முகேஷ் அம்பானியின் மகளுக்கு இரட்டை குழந்தை
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி - தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிராமல் ஆகியோரின் திருமணம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மிகவும் விமரிசையாக மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் நடைபெற்றது.
சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ரஜினி காந்த், ஐஸ்வர்யா ராய், ஆமீர் கான் பிரியங்கா சோப்ரா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தற்போது இந்த தம்பதியினருக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
Advertisement
இதையும் படிக்க- 24 வயதில் உயிரிழந்த வங்காள நடிகை
மேலும் குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் குழந்தைக்கு ஆதியா என்றும் ஆண் குழந்தைக்குக் கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.