இந்தியா

தில்லியில் மதர் டெய்ரி பால் விலை மீண்டும் உயர்வு

DIN

தில்லியில் பால் விலையை மதர் டெய்ரி பால் நிறுவனம் மீண்டும் உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி-என்சிஆர் முழுவதும் ஃபுல் க்ரீம் பால் லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பால் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக மதர் டெய்ரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மதர் டெய்ரி இந்த ஆண்டில் பால் விலையை உயர்த்துவது இது நான்காவது முறையாகும். 

இந்த விலை உயர்வால், ஃபுல் க்ரீம் பால் விலை லிட்டருக்கு ரூ.63ல் இருந்து ரூ.64 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், அரை லிட்டர் பாக்கெட்டுகளில் விற்கப்படும் முழு க்ரீம் பால் விலையில் அந்நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் டோக்கன் பால் (மொத்தமாக விற்பனை செய்யப்படும் பால்) லிட்டர் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. பால் பண்ணையாளர்களிடமிருந்து கொள்முதல் பால் விலையை உயர்த்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதர் டெய்ரி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT