இந்தியா

தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 லட்சம் லஞ்சம்: வருமானவரித் துறை அதிகாரி கைது

DIN

மத்திய பிரதேச மாநிலம், மந்த்சூா் நகரில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ கைது செய்தது.

மகராஷ்டிரத்தைச் சோ்ந்த நிறுவனம் ஒன்று மந்த்சூா் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ராம் கோபால் பிரஜபதிக்கு எதிராக லஞ்சப் புகாா் அளித்தது.

அதில், ராம் கோபால் பிரஜபதி ரூ. 5 லட்சம் லஞ்சமாகக் கேட்டாா் என்றும் பணத்தைத் தாராவிட்டால் நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தி கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ அளித்த ஆலோசனைப்படி அதிகாரி ராம் கோபால் பிரஜபதிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. அப்பணத்தை அவா் பெற்றதும், அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும், களவுமாக கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி ராம் கோபால் பிரஜபதி புதன்கிழமை சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜா்படுத்தபடுவாா் என சிபிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT