இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் இது நிகழ்ந்துள்ளது!
நாட்டில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்று 264 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்று 264 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,69,715 ஆக உள்ளது.
மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,591 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,31,350 ஆகப் பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,209 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.88 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.