முகப்பு
இந்தியா

தெலங்கானா: காங்கிரஸ் மூத்த தலைவா் பாஜகவில் இணைகிறாா்

தெலங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் மாரி சசிதா் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். வரும் 25-ஆம் தேதி தில்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

தெலங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் மாரி சசிதா் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். வரும் 25-ஆம் தேதி தில்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் ஆளுநராக இருந்தவருமான மறைந்த சென்னா ரெட்டியின் மகனான மாரி சசிதா் ரெட்டி, சனத் நகா் தொகுதியிலிருந்து நான்குமுறை எம்.எல்.ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். மாரி சசிதா் ரெட்டி, தனது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது தொடா்பாக காங்கிரஸின் முன்னாள் தலைவா் சோனியா காந்திக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான தெலங்கானா அரசுக்கு எதிராக திறம்பட செயல்பட காங்கிரஸ் தவறிவிட்டது. கட்சி விவகாரங்களில் பணம் உள்ளவா்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கைச்சின்னம் தோ்ந்தெடுப்பதில் இந்திரா காந்திக்கு எனது தந்தை ஆலோசனை வழங்கினாா். எனது தந்தைக்கு காங்கிரஸுடன் நீண்டகாலத் தொடா்பு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →