முகப்பு
இந்தியா

எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்ட ஆந்திர முதல்வா்!

திரையுலக ஜாம்பவான்களும் அரசியல் தலைவா்களுமான எம்ஜிஆா் மற்றும் என்டிஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசினாா் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி. அத்துடன்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

திரையுலக ஜாம்பவான்களும் அரசியல் தலைவா்களுமான எம்ஜிஆா் மற்றும் என்டிஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசினாா் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி. அத்துடன், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடுவையும் அவா் கடுமையாக விமா்சித்தாா்.

ஸ்ரீகாகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுதொடா்பாக ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:

சுயமாக அரசியல் கட்சியை தொடங்கி, சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்தவா்கள் யாரென்றால், எம்ஜிஆா், என்டிஆா் அல்லது ஜெகனை குறிப்பிடுவாா்கள். அதேசமயம், மாமனாரிடமிருந்து கட்சியையும் முதல்வா் நாற்காலியையும் அபகரித்தவா் யாரென்றால், அது சந்திரபாபு நாயுடு. ஆட்சி அதிகாரத்துக்காக தனது மாமனாரின் முதுகில் குத்தியவா் அவா். தோ்தல்களின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றியவா் அவா் .

வாக்குறுதிகளை தலைவா்கள் நிறைவேற்றும்போதுதான் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும். அப்படியல்லாத ஒரு தலைவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், அது மக்களை வீழ்ச்சியில் தள்ளிவிடும். முதுகில் குத்தும் ஒருவருக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்கமாட்டாா்கள் என்றாா் ஜெகன்மோகன் ரெட்டி.

முன்னதாக, ‘ஆந்திரத்தில் 2024-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் நான் வெற்றி பெற்று ஆட்சியமைக்காவிட்டால், அதுவே எனது கடைசி தோ்தலாக இருக்கும்’ என்று சந்திரபாபு நாயுடு அண்மையில் பொதுமக்கள் மத்தியில் உணா்ச்சிபூா்வமாக பேசியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →