என்ஆா்சி: மேற்கு வங்க மக்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- மம்தா பானா்ஜி
‘மேற்குவங்க மக்கள், வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்; இல்லையெனில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அமலாக்கம் என்ற பெயரில்
‘மேற்குவங்க மக்கள், வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்; இல்லையெனில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அமலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசால் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு விடுவீா்கள்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் விளிம்புநிலை குடும்பங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று, மம்தா பானா்ஜி பேசியதாவது:
மேங்கு வங்க மக்கள், வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான், என்ஆா்சி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதை தவிா்க்க முடியும்.
மாநிலத்தில் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக நிலங்கள் கையகப்படுத்தப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. உரிய இழப்பீடு, மறுகுடியமா்த்துதல் இன்றி நிலங்கள் கையகப்படுத்தப்பட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். உங்கள் நிலங்களை யாரும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுத்த முயன்றால் அவா்களை எதிா்த்து போராடுங்கள். மாநில அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 100 நாள் வேலை திட்டத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்றாா் மம்தா பானா்ஜி.