கோப்புப் படம் 
இந்தியா

கோவாவில் போலி 'கால் சென்டர்': அமெரிக்கர்களுக்கு விபூதி அடித்த 6 பேர் கைது!

கோவாவில் போலி 'கால் சென்டர்' மையத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, ஆறு பேரை கைது செய்தனர்.

DIN

பனாஜி: கோவாவில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய 6 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

இவர்கள் வங்கிக் கடன்களுக்கான ஒப்புதல், மருத்துவ ரசீதுகள் வாங்கித் தருவதாகக் கூறி அமெரிக்கர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுபற்றி காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

"குற்றப்பிரிவு ஆய்வாளர் விஷ்வஜித் தலைமையிலான குழு சின்ச்வாடாவில் சோதனை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களிடமிருந்து 6 லேப்டாப்கள், மொபைல் ஃபோன்கள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT