ஹிமந்த பிஸ்வ சர்மா 
இந்தியா

'சதாம் ஹுசைனைப் போல இருக்கிறார் ராகுல் காந்தி' - அசாம் முதல்வரின் சர்ச்சைப் பேச்சு!

ராகுல் காந்தி, சதாம் ஹுசைனைப் போல இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ராகுல் காந்தி, சதாம் ஹுசைனைப் போல இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் குஜராத்தில் ஆமதாபாத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'பாஜக கடந்த ஒரு மாத காலமாக குஜராத்தில் தீவிர அரசியல் பிரசாரம் செய்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த பிரசாரத்தில் பங்கெடுத்து தேர்தலுக்கு முன்னதாகவே கட்சிக்குத் தேவையான உந்துதலைக் கொடுத்து வருகின்றனர். 

ராகுல் காந்தி தற்போது, ஈராக் சர்வாதிகாரி சதாம் ஹுசைனைப் போல இருக்கிறார். குஜராத்தில் அவர் பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் இல்லாத இடங்களில் மட்டுமே அவர் பிரசாரம் செய்கிறார். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக இருக்கலாம். 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் சேர பாலிவுட் நட்சத்திரங்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்திருக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

ராகுல் காந்தி பற்றிய அசாம் முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT