இந்தியா

பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்

DIN


பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணுக்குப் புறப்பட்டது. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக படிப்படியாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

எதிர்காலத் திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை தற்போது கூற இயலாது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளன. இதில் 4 செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் உள்ளன. முழு பணிகள் முடிவடைந்தவுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT