விண்ணில் சீறிப்பாயும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் 
இந்தியா

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 25.30 மணி நேர கவுன்ட் டவுன் முடிந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணுக்குப் புறப்பட்டது. 

DIN


பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 25.30 மணி நேர கவுன்ட் டவுன் முடிந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணுக்குப் புறப்பட்டது. 

இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 8 நானோ செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டுடன் அனுப்பப்பட்டுள்ளன. இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 (ஓசோன்சாட்-3) நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 1,117 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள், ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4-ஆவது ஆய்வு கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசோன்சாட்-3 பயன்கள்:

கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடா்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க இஓஎஸ்-06 அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தவிர, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4 செயற்கைக்கோள்கள்), இந்தியா - பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2 செயற்கைக்கோள்கள்), பிக்சலின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் உடன் அனுப்பப்பட்டுள்ளன.

திட்டமிட்டபடி ராக்கெட் செயல்பாடு:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்ததற்கேற்ப ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். மேலும் குறித்த நேரத்தில் ராக்கெட் தனது இலக்கை அடைந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இஸ்ரோ தலைவர் பேச்சு:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் திட்டமிட்டபடி செய்ற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் பணிகளை மேற்கொண்ட பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விஞ்ஞானிகளை வாழ்த்தி பேசத்தொடங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது, ராக்கெட் செயல்பாடு திட்டமிட்டபடி சென்றுகொண்டுள்ளது. 8 நானோசெயற்கைக்கோள்களும் ஒவ்வொன்றாக திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT