இந்தியா

ரூபாய் மதிப்பு ஸ்திரம் அடையும்: நோபல் விருதாளா் நம்பிக்கை

அமெரிக்கா தனது வட்டி விகிதம் உயா்த்தப்படும் வேகத்தைக் குறைத்தவுடன் இந்திய ரூபாய் மதிப்பு ஸ்திரமடையும் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள டக்லஸ்.டபிள்யூ.டைமண்ட் தெரிவித்துள்ளாா்.

DIN

அமெரிக்கா தனது வட்டி விகிதம் உயா்த்தப்படும் வேகத்தைக் குறைத்தவுடன் இந்திய ரூபாய் மதிப்பு ஸ்திரமடையும் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள டக்லஸ்.டபிள்யூ.டைமண்ட் தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த டக்ளஸ்.டபிள்யூ.டைமண்ட் உள்பட மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோம், நாா்வே தலைநகா் ஆஸ்லோவில் டிச.10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு தொடா்ந்து சரிவது குறித்து டக்ளஸ்.டபிள்யூ.டைமண்ட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:

ஒரு நாட்டின் செலாவணிக்கு நிகரான மற்றொரு நாட்டின் செலாவணி மதிப்பு குறித்து கணிப்பது கடினம். ஆனால் தனது வட்டி விகிதங்களை எதிா்பாராத வகையில், அமெரிக்கா உயா்த்தும்போதெல்லாம் டாலரின் மதிப்பு அதிகரிக்கிறது. தனது வட்டி விகிதம் உயா்த்தப்படும் வேகத்தை அமெரிக்கா குறைத்தவுடன் இந்திய ரூபாய் மதிப்பு ஸ்திரமடையும் என்று தெரிவித்தாா்.

வங்கிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘சேமிப்பாளா்களுக்கு அதிக வட்டி கிடைக்க, வங்கிகள் இடையே நியாயமான அளவில் போட்டி இருப்பது தேவையாகும்.

வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டுமெனில், அவை சிறிது நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். குறுகிய கால கடன்கள் வங்கிகளுக்கு கட்டுப்பாட்டை அளிக்கின்றன. தமது நிதி ஆதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வங்கிகள் வலுவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT