உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது ஒற்றுமை நடைப்பயணம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது.
உஜ்ஜைன்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார். பிறகு அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
Advertisement
Advertisement
உஜ்ஜைன் நகருக்குள் ஒற்றுமை நடைப்பயணம் நுழைந்த போது, அங்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடைப்பயணத்தின் 83வது நாளான இன்று நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர்.
இன்று முற்பகலில் நடைப்பயணம் முடிந்ததும், ஸ்ரீ மகாவீர் தபோபூமி மற்றும் மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் ராகுல் பங்கேற்கவிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.