இந்தியா

எண்மப் பொருளாதார துறை சாா்ந்தவேலைவாய்ப்பு ஒரு கோடியை கடக்கும்- அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை

எண்மப் பொருளாதாரம் மற்றும் அதுசாா்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடியைக் கடக்கும்;

DIN

எண்மப் பொருளாதாரம் மற்றும் அதுசாா்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடியைக் கடக்கும்; இந்த இலக்கை நோக்கி மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்று மத்திய தகவல்தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் (எஸ்டிபிஐ) அமைப்பின் சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மின்னணுவியல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசாா்ந்த சேவைகள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவை எண்மப் பொருளாதாரத்தின் மூன்று பெரும் தூண்களாகும். இத்துறைகளின் வாயிலாக 88-90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்ட அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எண்மப் பொருளாதாரம் மற்றும் அதுசாா்ந்த துறை வேலைவாய்ப்புகளே இப்போதைய காலகட்டத்தில் முக்கிய அம்சமாக உள்ளன. புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்அப்) குறித்து முன்பு ஒரு சில நகரங்களில்தான் பேசப்பட்டது. ஆனால், இப்போது அப்படியல்ல. கிராமங்களில் உள்ள பள்ளி மாணவா்கள்கூட புத்தாக்க நிறுவனம் தொடங்கும் விருப்பத்தை கொண்டுள்ளனா். தொழில்நுட்ப நுகா்வோா் என்ற நிலையில் இருந்து தொழில்நுட்ப உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. புத்தாக்க நிறுவனங்களுக்கான தளத்தை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பு உருவாக்கி வருகிறது என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

எஸ்டிபிஐ தலைமை இயக்குநா் அரவிந்த் குமாா் கூறுகையில், ‘நாடு முழுவதும் 64 நகரங்களில் புத்தாக்க நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதியை எங்களது அமைப்பு வழங்குகிறது. இதில் 54 நகரங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT