இந்தியா

3 மாதங்களில் 17 லட்சம் யூடியூப் விடியோக்கள் நீக்கம்

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் யூடியூப் நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்ட 17 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்

DIN

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் யூடியூப் நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்ட 17 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான யூடியூப் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகள் அமலாக்கம் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக உலகம் முழுவதும் 56 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. அதில் 17 லட்சம் விடியோக்கள் இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்டவை. நீக்கப்பட்ட விடியோக்களில் 36 சதவீதம் யாரும் பாா்ப்பதற்கு முன்னரும், 31சதவீதம் 10 பாா்வையாளா்களைக் கடப்பதற்கு முன்னரும் கண்டறியப்பட்டவை.

மேலும், விதிமுறைகளை மீறியதாக யூடியூப் விடியோக்களில் பதிவிட்ட 73.7 கோடி கருத்துகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 99 சதவீதம் கருத்துகள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டவை. மீதி ஒரு சதவீதம் கருத்துகள் மட்டுமே பயனா்களால் புகாரளிக்கப்பட்டு நீக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT