இந்தியா

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்: மணீஷ் சிசோடியா

DIN

நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்  என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஒன்றிற்கு பார்வையிட சென்ற அவர் இதனை தெரிவித்தார். பள்ளிகள் மாணவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளின் கல்வி குறித்து அவர் பேசியதாவது: “ உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும் எனில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் தொழிலதிபர்கள் ஆகவும், வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாகவும் மாற நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தில்லி அரசு மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்குவதற்கு பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனை இலவசமாகவும் வழங்கி வருகிறது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் எனக்கும் ஒரு கனவு உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அந்த கனவு. அவர்களுக்கு உலகத் தரத்தில் கல்வியினை இலவசமாக வழங்க வேண்டும். நாங்கள் அதற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT