2022க்குள் இந்தியாவில் இயற்கைப் பேரழிவு: பாபா வங்கா ஆரூடம் 
இந்தியா

2022-க்குள் இந்தியாவில் பேரழிவா? மக்களை அச்சமூட்டும் பாபா வங்கா ஆரூடம்

இயற்கை பேரழிவு உள்ளிட்ட உலகம் பற்றிய பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வரும் பாபா வங்கா, 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இயற்கைப் பேரழிவு நிகழும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

இயற்கை பேரழிவு உள்ளிட்ட உலகம் பற்றிய பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வரும் பாபா வங்கா, 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இயற்கைப் பேரழிவு நிகழும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா என்ற 81 வயதான கியூபா நாட்டைச் சேர்ந்த இவரை பாபா வங்கா என்றே இவரைத் பின்தொடர்வோர் அன்போடு அழைக்கிறார்கள்.

வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை இவர் அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவது வழக்கம். 

இரட்டைக் கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம், என அவர் இதுவரை வெளியிட்ட கணிப்புகளில் சுமார் 90 சதவீதம் துல்லியமாக நடந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார்கள் அவரது பின்தொடர்வோர்.

இவர் 12 வயதாக இருந்தபோது, புயலில் சிக்கி, கண்பார்வையை இழந்தவர். இவர் கண்பார்வையை இழந்த பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

அவர் இந்த ஆண்டுக்கான கணிப்புகளை மட்டுமல்ல, 5079 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஆறு கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் தெள்ளத்தெளிவான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அது என்ன 5079 ஆம் ஆண்டு வரை என்கிறீர்களா? அவரது கணிப்பின்படி, 5079ஆம் ஆண்டுதான் ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.

அதுபோல, இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்கள் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரித்து அதனால் நாட்டில் பற்றாக்குறை, பஞ்சம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.

இவர் வெளியிட்டிருக்கும் சில அதிசய கணிப்புகளில், 2028ஆம் ஆண்டு வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்கள் எனறும், 2046ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும், 2100ஆம் ஆண்டுக்குப் பிறகு செயற்கை சூரிய ஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே இருக்காது என்றும் கணித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT