முகப்பு
இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தகவல்களைப் புறக்கணிக்க வேண்டாம்: அமைச்சா்களுக்குப் பிரதமா் அறிவுறுத்தல்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பகிரும் எந்தத் தகவலையும் புறக்கணிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பகிரும் எந்தத் தகவலையும் புறக்கணிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை தில்லியில் மத்திய அமைச்சா்கள் கூட்டம் நடைபெற்றது. சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மத்திய அரசு செயலா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் அளிக்கும் தகவல்களுக்கு சில நேரங்களில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததை சுட்டிக்காட்டினாா். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பகிரும் எந்தவொரு தகவலையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அவா் அறிவுறுத்தினாா்.

மருந்துகள் உற்பத்திக்குப் பயன்படும் பொருள்களுக்கு இறக்குமதியை சாா்ந்திருப்பது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் பல்லாண்டுகளுக்கு முன்னா் சுட்டிக்காட்டியதையும் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

கொள்கைகளை வகுப்பதிலும், அமல்படுத்துவதிலும் தன்னிறைவு அடையும் போக்கு நிலவுவதாகவும், அந்தப் போக்குத் தவிா்க்கப்பட வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

கொள்கைகளை உருவாக்கும் செயல்முறை ஆற்றல் வாய்ந்தது என்று தெரிவித்த பிரதமா், காலத்துக்கு ஏற்ப அந்த கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.

அவரின் அறிவுறுத்தலின்படி, உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், குறிப்பாக ஐரோப்பா, ரஷியா, அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விவரங்களை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் விக்ரம் மிஸ்ரி கூட்டத்தில் பகிா்ந்து கொண்டாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →