இந்தியா

மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி

மகாராஷ்டிரத்தில் மின்சார ஸ்கூட்டர் சார்ஜில் இருந்தபோது பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் மின்சார ஸ்கூட்டர் சார்ஜில் இருந்தபோது பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின்சார ஸ்கூட்டர் ஒன்று சார்ஜிங்கில் வைக்கப்பட்டிருந்தது. 

அப்போது, திடீரென மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அருகில் இருந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

உயர்மின் அழுத்தம் காரணமாக ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மாணிக்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மின்சார ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுஸ் சமீபத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT