கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி கொடூர கொலை: வீட்டுப் பணியாளர் மாயம்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத் துறை டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது வீட்டில் வேலை செய்து வந்த பணியாளர் மாயமான நிலையில், அவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். 

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடரைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குடும்ப பிரச்னை அல்லது முன்விரேர்தம் காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் வருகை தந்திருக்கும் நிலையில், சிறைத்துறை டிஜிபி மரணம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT