இந்தியா

11 அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது: சொல்வது மத்திய அமைச்சர்

DIN


புது தில்லி: மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் கடந்த மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

கடந்த மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 முதல் 11 சதவீதம் வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப்பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், எந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது என்ற பட்டியலையும் சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, நாட்டு மக்களுக்கு விளக்கியுள்ளார்.

அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பாமாயில். செப்டம்பர் 2ஆம் தேதி ஒரு லிட்டர் பாமாயில் 132 ஆக இருந்த நிலையில், 11 சதவீதம் விலை குறைந்து ரூ.118க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வனஸ்பதி விலை 6 சதவீதம் சரிந்து ஒரு கிலோ ரூ.152ல் இருந்து தற்போது ரூ.143க்கு விற்பனையாகிறது.

சூரியகாந்தி எண்ணெய் விலை 6 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் ரூ.176க்கு விற்பனையான நிலையில் அது ரூ.165க்கு தற்போது விற்பனையாகிறது.

வெங்காயம் விலையும் ஒரு கிலோ ரூ.26க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கம் 28 ரூபாயிலிருந்து 26 ரூபாயாகவும், பருப்புகளின் விலையும் குறைந்திருப்பதாகவும் அந்த பட்டியல் தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT