இந்தியா

சஞ்சய் ரெளத்துக்கு அக். 10 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

DIN

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரெளத், அவரது குடும்பத்தினா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர். 

பின்னர், மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அக்டோபர் 3 ஆம் தேதியுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 10 வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க |  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT