இந்தியா

தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர் ராவ்?

DIN


தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகா் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

மேலும், தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதலே சந்திரசேகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தசரா விழாவான நாளை தனது தேசிய கட்சியின் பெயரை சந்திரசேகர் ராவ் வெளியிடவுள்ளதாகவும், டிசம்பர் 9-ஆம் தேதி தில்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT