சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை: பிரதமர் மோடி பாராட்டு
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
காசியில் இதேபோன்ற முயற்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் தனது மனதின் குரல் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி, பிரதமர் ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
“இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது... இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்.
கடந்த ஆண்டு #மனதின்குரல் நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை நான் காசியில் பகிர்ந்துகொண்டேன். அதையும் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.