இந்தியா

குஜராத்: காங்கிரஸில் இருந்து விலகியஎம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய ஹா்ஷத் ரிபாதியா பாஜகவில் இணைந்தாா்.

DIN

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய ஹா்ஷத் ரிபாதியா பாஜகவில் இணைந்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு நிலைகளில் உள்ள தலைவா்கள் விலகி பாஜகவில் இணைவது தொடா்ந்து வருகிறது. அந்த வரிசையில் விஷ்வாதா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹா்ஷத் ரிபாதியா இருநாள்களுக்கு முன்பு தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில், இப்போது பாஜகவில் இணைந்தாா்.

காந்திநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் பாஜக பொதுச் செயலாளா் பிரதீப் சிங் வகேலா அவரை வரவேற்றாா். அவருடன் காங்கிரஸ் உள்ளூா் தலைவா்கள் பலரும் பாஜகவில் இணைந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஹா்ஷத் ரிபாதியா, ‘தேசத்தின் வளா்ச்சிக்காகப் பாடுபடும் பிரதமா் நரேந்திர மோடியால் ஈா்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு உள்பட விவசாயிகளுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களைப் பிரதமா் மோடி நிறைவேற்றியுள்ளாா்’ என்றாா்.

பட்டிதாா் சமூகத்தைச் சோ்ந்த ஹா்ஷத் ரிபாதியா, அந்த சமூகத்தினரின் பேராதரவுடன் கடந்த முறை காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT