இந்தியா

பாகிஸ்தான் சிறையில் ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

DIN

பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீப காலமாக மீனவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 6 இந்திய கைதிகளில் 5 மீனவர்கள் பாகிஸ்தான் காவலில் உயிரிழந்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் தண்டனையை நிறைவு செய்தவர்கள்.

ஆனால் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். 

அந்த நாட்டில் உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT