இந்தியா

உள்துறை அமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்கள்

DIN

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் 11 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் குவாஹாட்டியில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வேளையில் அசாம் மாநில காவல் துறை அதிகாரிகளால் 8 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான போதைப் பொருள்கள் திரிபுரா மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் 12000 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அருணாசலப் பிரதேசத்தில் 4000 கிலோ, மேகலாயாவில் 1600 கிலோ, மணிப்பூரில் 1900 கிலோ, மிசோரத்தில் 1500 கிலோ, நாகலாந்தில் 398 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT